சமூக நீதித்துறை விடுதி உணவுகளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் அனுப்ப உத்தரவு

விடுதிகளில் உணவு சரியாக வழங்கப்படுவது இல்லை என அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன
WhatsApp
Published on

சமூக நீதித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த விடுதிகளில் உணவு சரியாக வழங்கப்படுவது இல்லை எனவும், தரமான உணவுகள் வழங்குவது இல்லை எனவும் தொடர்ச்சியாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி சமூக நீதித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் செயல்படும் விடுதிகளில் தினசரி காலை, மதியம், இரவு வழங்கப்படும் உணவுகளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் குழுவில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவுகள் தரமானதாக இல்லை என புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com