நீட் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் 27 பேர் தேர்ச்சி

நீட் தேர்வில் தமிழக அளவில் விழுப்புரம் மாணவர் வேங்கடபதி 720 மதிப்பெண்ணுக்கு 705 பெற்று முதலிடம் வகித்தார்.
NEET
Published on

சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த 122 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் 27 பேர் மட்டுமே தேர்ச்சிக்கான தகுதியைப் பெற்றனர்.

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் தமிழகத்தில் இருந்து 66 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் தரவரிசை விவரம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் இருந்து தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவிற்கு வந்து உள்ளது.

நீட் தேர்வில் தமிழக அளவில் விழுப்புரம் மாணவர் வேங்கடபதி 720 மதிப்பெண்ணுக்கு 705 பெற்று முதலிடம் வகித்தார். சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த 122 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் 27 பேர் மட்டுமே தேர்ச்சிக்கான தகுதியைப் பெற்றனர்.

12 மாணவர்களும், 17 மாணவிகளும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சாய் சரண் என்ற மாணவர் 369 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இது தவிர தமிழக முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த சலுகையின் கீழ் மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இந்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர் விவரம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com