நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே எனக்கு கிடைத்த பெருமை- மு.க.ஸ்டாலின்

பெரியார், கலைஞருக்கு கிடைக்காத பாக்கியம் ஐயா நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது.இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் நல்லகண்ணு
நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே எனக்கு கிடைத்த பெருமை- மு.க.ஸ்டாலின்
Published on: 

சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. நல்லகண்ணுக்கு பழ.நெடுமாறன் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* ஐயா நல்லகண்ணுவிடம் வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளோம்.

* தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட மிகப்பெரிய வாழ்த்து இல்லை.

* பெரியார், கலைஞருக்கு கிடைக்காத பாக்கியம் ஐயா நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது.

* பொதுவுடைமை, திராவிடம், தமிழ் தேசிய சிந்தனையாளர்கள் நிறைந்த மேடை இது.

* தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட மிகப்பெரிய ஊக்கம் எதுவும் இல்லை.

* 100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார் நல்லகண்ணு.

* கட்சிக்காகவே உழைத்தார். உழைத்த பணத்தை எல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் நல்லகண்ணு

* கலைஞர் இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் இவருக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கினேன். நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே எனக்கு கிடைத்த பெருமை என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com