தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் ஆலோசனையில், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை:

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

த.வெ.க. ஆதரவு கோரியது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் ஆலோசனையில், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் த.வெ.க.வுக்கு ஆதரவு கோரியது தி.மு.க.வில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் நிலை என்னவாகும் இருக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com