பாஜக தயவுடன் ஆட்சி அமைக்க திமுக - அதிமுக முயற்சி: அமைச்சர் நிர்மல்குமார்

மு.க.ஸ்டாலினே தொலைபேசியில் தொடர்புகொண்டு இபிஎஸ்-ஐ முதல்வராக்க பேசியதாக காதர் மொய்தீன் கூறி உள்ளார்.
Minister Nirmal Kumar
Published on

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பாஜக தயவுடன் திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தன.

* திமுக, அதிமுக, பாஜக கூட்டு சதியை சகிக்க முடியாமல் கூட்டணி கட்சிகள் வெளியேறி உள்ளன.

* குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலகி வருகிறார்கள்.

* பிற கட்சிகளில் இருந்து யாராவது வெளியேறினால் அதற்கும் த.வெ.க.விற்கும் எந்த தொடர்பும் இல்லை.

* எந்த கட்சியில் இணைவது எந்த அரசியல் இயக்கத்தில் இணைந்து செயல்படுவது என்பது அவரவர் முடிவு.

* தமிழ்நாட்டில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சி தான் என்பது உறுதியாகி உள்ளது.

* ஆளுநரை சந்தித்தது வழக்கமான அலுவல் நடைமுறை தான். ஆளுநர் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. அலுவல் சார்ந்து மட்டுமே சந்தித்தோம்.

* மு.க.ஸ்டாலின், உதயநிதி, இபிஎஸ், அவருடைய மகன் மற்றும் சில தொழிலதிபர்கள் இணைந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். இந்த முயற்சிக்கு திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

* மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரும் இபிஎஸ் குடும்பத்தினரும் தங்கள் குடும்ப சொத்தை காக்கவே இந்த முயற்சி செய்கின்றனர்.

* பல வழக்கு வரும் என்ற பயத்தில் இன்று காலை வரை திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்கிறது.

* மு.க.ஸ்டாலினே தொலைபேசியில் தொடர்புகொண்டு இபிஎஸ்-ஐ முதல்வராக்க பேசியதாக காதர் மொய்தீன் கூறி உள்ளார்.

* திமுக, அதிமுக சேர்ந்து பாஜகவிடம் சரண்டர் ஆகி ஒரு கேபினட் இடம் கேட்டு நிற்க போகின்றன.

* 2 வருடத்தில் திமுகவும் அதிமுகவும் பாஜகவில் இணைந்து விடுவர்.

* ஸ்டாலினும் இபிஎஸ்-ம் வீட்டுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியை பெற்றுவிட்டு கட்சியை இணைத்து விடுவர்.

* திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்வில் அழகிகள் நடனம் இடம்பெற்றது தற்செயல்.

* போதைப்பொருள் சர்ச்சை தொடர்பாக அமைச்சர் சரத் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

* அமைச்சர் சரத் கொடுத்த விளக்கம் தொடர்பாக தவெக தலைமை ஆய்வு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com