விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் தாயார் நினைவு ஜெபம் - விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு

நிகழ்ச்சிக்கு தென் கேரளா சி.எஸ்.ஐ. பேராயர் பினிஸ்டான் பென் தலைமை தாங்கினார்.
விளவங்கோடு  சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் தாயார் நினைவு ஜெபம் - விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
Published on

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் தாயார் நான்காம் நாள் நினைவு ஜெபத்தில் கன்னியாகுமரி விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்றார்.

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் அவர்களின் தாயார் தங்கம் தாம்சன் கடந்த 14-ந்தேதி மரணமடைந்தார். அவர்களது 4-ம் நினைவு ஜெபம் இன்று பாறசாலையை அடுத்த சிறிய கொல்லா இல்லத்தில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தென் கேரளா சி.எஸ்.ஐ. பேராயர் பினிஸ்டான் பென் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அமைப்பு பொதுச் செயலாளரும் எம்பி.யுமான கே.சி வேணுகோபால், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்,எம்பி, கேரளா காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் சனல், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட்,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங், மீனவர் அணி மாநில தலைவர் ஜோர்தான் மற்றும் கேரளா தமிழக சி.எஸ்.ஐ. போதகர்கள், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரணமடைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் அவர்களின் தாயார் தங்கம் தாம்சன் அவர்களது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com