சுற்றுலா வந்தவர்களை நடுரோட்டில் நின்று புகைப்படம் எடுத்த நபர் கார் மோதி உயிரிழப்பு

கன்னியாகுமரியில் இன்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.சுற்றுலா வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு பாலசுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளனர்.
சுற்றுலா வந்தவர்களை நடுரோட்டில் நின்று புகைப்படம் எடுத்த நபர் கார் மோதி உயிரிழப்பு
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 வழிச்சாலையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பாலசுப்பிரமணியம் (50) என்பவர் கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று காலை பாலசுப்பிரமணியம் நடைப்பயிற்சி செல்லும் போது சுற்றுலா வாகனத்தில் வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு அவரிடம் கேட்டுள்ளனர்.

அவரும் சாலையின் நடுவே நின்று அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த கார் அவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதனால் நிகழ்விடத்திலேயே பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com