பணி ஆணைகள் வழங்கும் விழா - தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியை தொடங்கிய தமிழ்நாடு அரசு

சென்னையில் உதவி மருத்துவ அலுவலர்கள் பணி ஆணைகளை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
பணி ஆணைகள் வழங்கும் விழா - தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியை தொடங்கிய தமிழ்நாடு அரசு
Published on

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடலை பாட வேண்டும். அதைத் தொடர்ந்து, தேசிய பாடல், தேசிய கீதம் பாட வேண்டும் அல்லது இசைக்க வேண்டும் என புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் ஆளுநர் அலுவலகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்நிலையில், சென்னையில் உதவி மருத்துவ அலுவலர்கள் பணி ஆணைகளை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

தமிழக சுகாதாரத்துறை சார்பிலான நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், 751 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள், சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட 1,393 பேருக்கும் பணி ஆணைகளை வழங்க உள்ளார். மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குகிறார். ரூ.139.47 கோடியில் 86 கட்டடங்களை அவர் திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி வழக்கம்போல தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

அரசு நிகழ்ச்சிகளில் வழக்கமான நடைமுறையை பின்பற்றி வந்த தமிழ்நாடு அரசு வந்தே மாதரம் பாடல் பாடாமல் வழக்கமான பழைய நடைமுறையே இன்றைய நிகழ்வில் பின்பற்றியது.

X

Maalai Malar
www.maalaimalar.com