

ஓசூரில் நடைபெற்று வரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய கார்கே," நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம். இந்திய நாடே ஸ்டாலின் பின்னால் இருக்கிறது. நீங்கள் பின்பற்றும் திராவிட கொள்கையை ஆதரித்து நிற்கிறதுஊ" என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தனக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
"நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று நினைக்காதீர்கள். ஒட்டுமொத்த நாடும் உங்களுக்குப் பின்னால் நிற்கிறது”
மரியாதைக்குரிய கார்கே அவர்களே, ஓசூரில் ஜனநாயகத்தைப் பாதுகாத்து, நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக நீங்கள் ஆற்றிய எழுச்சியூட்டும் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்திய உரைக்கு நன்றி.
சகோதரர் ராகும் காந்தி அவர்களின் நேற்றைய சக்திவாய்ந்த உரையும், இன்றைய உங்கள் உரையும் நமது கூட்டணிக் தொண்டர்களுக்குப் பெரும் ஆற்றலை அளித்துள்ளன.
ஏப்ரல் 17 அன்றே, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தீர்க்கமாக நிராகரிக்கப்பட்டது.
பிரிவினைவாத பாஜகவிடமிருந்து தமிழ்நாடு பாதுகாக்கப்படுவதற்கு திமுக அரசே காரணம்.
திராவிடமாதிரியின் தொடர்ச்சி மட்டுமே இந்தப் பாதுகாப்பு தொடர்வதை உறுதிசெய்ய முடியும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது மாநில உரிமைகளையும், பிராந்தியக் கட்சிகளையும், நமது தனித்துவமான அடையாளங்களையும் அழிக்க முற்படும் ஒரு அழிவு சக்தியாகும்.
நாம் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டை எதிர்கொள்ளும் அச்சுறுத்தலிலிருந்து நமது மக்களைப் பாதுகாப்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.