தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்..!- வானிலை ஆய்வு மையம்

இந்தியாவிலேயே நேற்று அதிகபட்சமாக மதுரையில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு.
Heat wave in Tamilnadu
Published on

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சம் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கு

குறிப்பாக, தமிழகத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை 17 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தருமபுரியில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரையிலும் வெப்ப அலை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், நாமக்கல், கரூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் வரை வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மதுரை

இந்தியாவிலேயே நேற்று அதிகபட்சமாக மதுரையில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் வெப்ப அலை தொடரும் என வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது.

வெப்பம் அதிகரிப்பு ஏன்?

தமிழ்நாட்டில் ஜூலை மாதத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதற்கான காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குனர் வி.ஆர்.துரை கூறியதாவது:-

தற்போது தென் தீபகற்ப இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பலவீனமாக நிலவி வருகிறது. இதற்கு, பூமத்திய ரேகையைத் தாண்டி வீசும் தென்மேற்குக் காற்று பலவீனமடைந்திருப்பதால், மேற்கு அரபிக் கடல் பகுதியில் இயல்பை விட குறைந்த வலிமையுடன் கீழ்மட்ட ஜெட் காற்று காணப்படுவதும், அதனு டன் வளர்ச்சி அடைந்து வரும் எல் நினோ நிலையும் இணைந்து முக்கிய காரணங்களாக உள்ளன.

இதன் விளைவாக, அரபிக்கடலில் இருந்து ஈரப்பதம் வருவது குறைந்துள்ளதால், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழைப்பொழிவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

மேலும், பலவீனமான பருவமழைச் சுழற்சியுடன், எல் நினோவால் ஏற்படும் பரந்த அளவிலான கீழ்நோக்கி வீசும் காற்று மேகங்கள் உருவாவதைத் தடுத்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் மேகமற்ற வானம் நிலவி, சூரியக் கதிர்வீச்சு அதிகளவில் தரையை அடைவதால், இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை உயர்ந்து பதிவாகி வருகிறது.

இதனையடுத்து, உள் தமிழகத்தின் சில பகுதிகள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகளுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கையை வெளி யிட்டுள்ளது.

பருவமழை வலுபெறும்

காற்று பகுப்பாய்வின்படி, தற்போது பலவீனமாக உள்ள கீழ்மட்ட ஜெட் காற்று வருகிற 17-ந் தேதியில் இருந்து படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, பூமத்திய ரேகையைத் தாண்டி அரபிக்கடலில் இருந்து ஈரப்பதம் வருவது அதிகரித்து, தென் தீபகற்ப இந்தியாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் படிப்படியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக, 17-ந் தேதியைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்க வாய்ப் புள்ளது.

மேகமூட்டம் மற்றும் மழைப்பொழிவு அதிகரிப்ப தால், தரையை அடையும் சூரியக் கதிர்வீச்சு குறைந்து, அதிகபட்ச வெப்பநிலை மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உள் தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகளில் தற்போது நிலவி வரும் வெப்ப அலை நிலை வாரத்தின் இரண்டாம் பாதியில் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் பருவமழையின் முன்னேற்றத்தை தொடர்ந்து தீவிர மாகக் கண்காணித்து, பொதுமக்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்புகளுக்கு தேவை யான முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை உரிய நேரத்தில் தொடர்ந்து வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com