"காமராஜர் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்"- பிரதமர் மோடியின் உரையை மேற்கோள்காட்டிய தமிழிசை!

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் நினைவுகளை போற்றி வணங்குகிறேன்.
Tamizhisai Soundararajan
Published on

இந்தியாவின் முன்னாள் முதலமைச்சரும்,‘கல்வி கண் திறந்தவர்’ என்று அழைக்கப்படுபவருமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை ஒட்டி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

மதிய உணவு தந்து கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் நினைவுகளை போற்றி வணங்குகிறேன்.

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின் தொலைக்காட்சியில் மக்களிடம் உரையாற்றும்போது ஊழலையும் கருப்பு பணத்தையும் ஒழிப்பதற்காக நான் எடுத்த இந்த பெரும்முயற்சியை பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் என்னை பாராட்டியிருப்பார் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியதை இங்கே நினைவு கூறுகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com