என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிமுக ஆட்சியில் சிங்காரத்தோப்பு பாலம் கட்டும்போதே இடிந்து விழுந்தது: இபிஎஸ்-க்கு அமைச்சர் பதிலடி
    X

    அதிமுக ஆட்சியில் சிங்காரத்தோப்பு பாலம் கட்டும்போதே இடிந்து விழுந்தது: இபிஎஸ்-க்கு அமைச்சர் பதிலடி

    • திமுக பொறுப்பேற்று 1505 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
    • எதிர்க்கட்சித்தலைவர் தன் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள ஈரை பேன் ஆக்க முயற்சிக்கிறார்.

    திமுக ஆட்சியில் கட்டிய பாலங்கள் எவ்வளவு தரமற்றவை என்பதற்கு அடித்துச்செல்லப்பட்ட பாலங்கள் சாட்சி என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திமுக பொறுப்பேற்று 1505 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. 328 பாலப்பணிகள் நடைபெறுகிறது.

    * அதிமுக ஆட்சியில் முடிக்காது நீண்ட நாள் நிலுவையிலிருந்த 38 ரெயில்வே மேம்பாலங்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது.

    * எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டி உடனே இடிந்து விழுந்த வரலாறும் உண்டு.

    * அதிமுக ஆட்சியில் கடலூர் சிங்காரத்தோப்பு பாலம் கட்டும்போதே இடிந்து விழுந்தது.

    * எதிர்க்கட்சித்தலைவர் தன் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள ஈரை பேன் ஆக்க முயற்சிக்கிறார் என்று கூறினார்.

    Next Story
    ×