அதிமுகவில் யாரையும் வளர விடாதவர் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி

சேலம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
அதிமுகவில் யாரையும் வளர விடாதவர் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி
Published on

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

* செங்கோட்டையன் திமுகவின் உளவாளி.

* அதிமுகவில் இருந்தபோதே உளவாளியாக இருந்தவர் செங்கோட்டையன். சட்டசபையில் திமுகவை எதிர்த்து பேசாதவர்.

* ஜெயலலிதாவை இழந்த பிறகு தாயில்லாத பிள்ளையாக தவித்தபோது அதிமுகவை உடைக்க முயன்றவர்களுக்கு துணை போனவர் செங்கோட்டையன்.

* அதிமுகவில் யாரையும் வளர விடாதவர் செங்கோட்டையன், சிறுமையாக பேச ஆரம்பித்து செல்வாக்கை இழந்து விட்டார்.

* செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்தில் யாரையும் வளர விட மாட்டார். அவரால் முத்துசாமி போன்றோர் கட்சியை விட்டு சென்றனர்.

* மக்களை அடிமைகளாக பார்க்கிறார் செங்கோட்டையன்.

* திமிர் பிடித்த, பொறாமை குணம் கொண்டவரான செங்கோட்டையன் நாட்டிற்கு தேவையா?

* மத்திய அரசின் நிதியுதவி இல்லாமல் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுக்க மாநில அரசு நிதியில் மேற்கொண்டோம்.

* சேலம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com