நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

நீட் விலக்கு சட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இனி ஓர் உயிரைக் கூட நாம் இழக்கக்கூடாது.
நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 19 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அந்த சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டு 16 மாதங்களாகிவிட்டன. ஆனால், நீட் விலக்கு சட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசு விளக் கம் கேட்பதும், அதற்கு தமிழக அரசு விளக்கம் அளிப்பதுமாக சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்படாததால், அதில் மதிப்பெண் எடுக்க முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சோகமும் நீடிக்கிறது.

மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருவது தான் கல்வியின் கடமை. ஆனால், அந்த கல்வியே மாணவர்களின் உயிர்களைப் பறிப்பதாக இருக்கக்கூடாது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இனி ஓர் உயிரைக் கூட நாம் இழக்கக்கூடாது. அதைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண் டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com