அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் - ஸ்டாலின் ஆலோசனை

இதன் மூலம் அவர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆக அதிகம் வாய்ப்புள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் - ஸ்டாலின் ஆலோசனை
Published on

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களை கைப்பற்றியது. அதில் 5 இடங்கள் கொண்ட காங்கிரஸ், 108 இடங்கள் வென்ற தவெக பக்கம் தாவியது.

மேலும் திமுக கூட்டணியில் 2 இடம் வைத்துள்ள திருமாவளவன், தலா நான்கு இடம் வைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுக்க தவெக முனைப்பு காட்டி வருகிறது.

59 எம்எல்ஏக்களை வைத்துள்ள திமுக எதிர்க்கட்சி இருக்கையில் அமர உள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் சுமார் 10,000 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சேகரிடம் தோற்றார். அதே நேரம் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனால் உதயநிதி சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆக அதிகம் வாய்ப்புள்ளது.

தற்போது 113 எம்எல்ஏகளுடன் பெரும்பான்மைக்காக தவெக பகிரத பிரயத்தனம் செய்து வரும் நிலையில் தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது என ஸ்டாலின் வாக்களித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com