தமிழ்நாட்டை போல புதுச்சேரியிலும் கொள்ளை அடிக்க முயற்சிக்கிறது தி.மு.க..!- இ.பி.எஸ் குற்றச்சாட்டு

கண்ணுக்கு தெரியாத காற்றிலும் கூட ஊழல் செய்த கட்சி திமுக.
தமிழ்நாட்டை போல புதுச்சேரியிலும் கொள்ளை அடிக்க  முயற்சிக்கிறது தி.மு.க..!- இ.பி.எஸ் குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து பெறுவதற்கு அதிமுக கடும் முயற்சிகளை மேற்கொள்ளும்.

திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. அடிக்கடி காலை வாரும் கட்சி திமுக.

கண்ணுக்கு தெரியாத காற்றிலும் கூட ஊழல் செய்த கட்சி திமுக.

கொரோனா காலத்தில் வெளிநாட்டு மக்களையும் காப்பாறிய பெருமை பிரதமர் மோடிக்கு உண்டு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு சுயநலவாதி, சூழ்நிலைக்கு ஏற்ப தன் முடிவை மாற்றிக் கொள்பவர்.

புதுச்சேரி மீனவ மக்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு மீனவர்களை போல புதுச்சேரி மீனவர்களுக்கும் நன்மைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் பேசி அதிமுக வாங்கி தரும்.

தமிழ்நாட்டை போல புதுச்சேரியிலும் கொள்ளை அடிக்க திமுக முயற்சிக்கிறது.

திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரி நிதி சுரண்டப்படும்.

திமுகவிற்கு தமிழ்நாட்டில் ஒரு கொள்கை, புதுச்சேரியில் வேறு ஒரு கொள்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com