நடிகர் என்ற அடையாளத்தை கடந்து சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதர் சூர்யா- மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி

அகரம் ஃபவுண்டேஷன் மூலம் அவர் மேற்கொண்டு வரும் சமூகப்பணிகளுக்கு எனது பாராட்டினை தெரிவித்தேன்.Good Vision Seva Trust மூலம் ஆற்றிவரும் சமூகப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
நடிகர் என்ற அடையாளத்தை கடந்து சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதர் சூர்யா- மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி
Published on

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தற்செயலாக சந்தித்துள்ளார்.

இதுதொடர்பாக மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பதிவில் கூறியிருப்பதாவது:-

நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவைசந்தித்தேன். அவரது அகரம் ஃபவுண்டேஷன் மூலம் அவர் மேற்கொண்டு வரும் சமூகப்பணிகளுக்கு எனது பாராட்டினை தெரிவித்தேன்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழிப்பயிற்சி அளிக்கும் எனது முயற்சி குறித்தும், நான் இளம் வயது முதல் Good Vision Seva Trust மூலம் ஆற்றிவரும் சமூகப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

நடிகர் என்ற அடையாளத்தை கடந்து சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com