

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. முழுவீச்சில் தயாராகிவிட்டது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், போட்டியிட விருப்பம் தெரிவித்த கட்சியினரிடம் நேர்காணலையும் தி.மு.க. நடத்தி வருகிறது.
கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று 3-வது நாளாக நேர்காணல் நடந்தது.
இந்நிலையில், நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் வரும் 23-ந்தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளைய வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற இருந்த திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு வேட்பாளர்களுக்கு 23-ந்தேதி நேர்காணல் காலை 9 மணிக்கு நடைபெறும்.
புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட வேட்பாளர்களுக்கு 23-ந்தேதி நேர்காணல் மாலை 4 மணிக்கு நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.