

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகளில் போட்டி என அனைத்தும் இறுதியாகியும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிடவில்லை.
மறுபுறம் பாஜகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. இதனால் போட்டி போட்டுக்கொண்டு தேசிய கட்சிகள் வெளியிடவில்லை எனவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒருவழியாக இன்று நண்பகல் பாஜக 27 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் காங்கிரஸும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இன்றிரவிற்குள் (ஏப்.2) அல்லது நாளை காலை பட்டியல் வெளியாகிவிடும் என அக்கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தை நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் 28 தொகுதிகளில் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. 11 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,
அதன்படி பொன்னேரியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் ஜே.ஹெச்.எம். அசான், ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை, சோழிங்கரில் ஏ.எம்.முனிரத்னம், ஊத்தங்கரையில் குப்புசாமி, கிருஷ்ணகிரியில் செல்லகுமார், பென்னாகரத்தில் ஜிகேஎம் தமிழ்குமரன், ஆத்தூரில் எஸ்.கே. அர்த்தநாரி, ஈரோட்டில் கோபிநாத் பழனியப்பன், உதகையில் சி. ராமச்சந்திரன், கவுண்டபாளையத்தில் கே.பி.சூரியபிரகாஷ், சிங்காநல்லூரில் வி.ஸ்ரீநிதி நாயுடு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
துறையூரில் விச்சு லெனின் பிரசாத், கடலூரில் ஏ.எஸ்.சந்திரசேகரன், மயிலாடுதுறையில் ஜமல் யூனஸ் முகமது, அறந்தாங்கியில் டி.ராமச்சந்திரன், காரைக்குடியில் எஸ்.மங்குடி, உசிலம்பட்டியில் டி.சரவணக்குமார், சிவகாசியில் ஜி.கணேசன் அசோகன், திருவாடானையில் ராம கருமாணிக்கம், சங்கரன்கோவிலில் சங்கை கணேசன், அம்பாசமுத்திரத்தில் வி.பி.துரை, நாங்குநேரியில் ரூபி மனோகரன், குளச்சல் தொகுதியில் தாரகை கத்பர்ட், விளவங்கோட்டில் டி.டி. பிரவீன், கிளியூரில் எஸ். ராஜேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.