மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் விஜய் நன்றி

கேரளம் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் விஜய் நன்றி
Published on

சென்னை :

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். முதலமைச்சர் விஜய் சந்தித்தது அரசியல் நாகரிகம் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலினும் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவை மேற்கொள்காட்டி முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திமு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்தை மேற்கொள்காட்டி, தமிழ்நாட்டின் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.

இதேபோல் கேரளம் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com