கரூரில் த.வெ.க. சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்

ஓட்டுக்கு காசு தரும் கலாச்சாரத்தை அடித்து நொறுக்கிய நமக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டகம் பேரம்?
CM Vijay
Published on

கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* என் மனதை விட்டு கரூர் எப்போதும் நீங்கவே நீங்காது.

* அரசியல் சூழ்ச்சியை இனி யாரும் யோசிக்க கூடாது என்பதற்காக கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவத்திற்காக நினைவுச்சின்னம் அமைக்கப்படும்.

நினைவுச்சின்னம்

* கரூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும்.

* ஓட்டுக்கு காசு தரும் கலாச்சாரத்தை அடித்து நொறுக்கிய நமக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டகம் பேரம்?

* தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் வெவ்வேறு ஆட்கள் இல்லை. இருவரும் கூட்டுக் களவாணிகள்.

* கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கிருக்கார் என்றே தெரியாத அளவுக்கு ஓடு ஓடு என ஓடுவதாக சினிமா பாட்டுடன் கிண்டலாக விமர்சித்தார்.

* மற்றொருவர் (எ.வ.வேலு) சிங்கப்பூரில் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

* தாங்கள் ஆட்சியில் இருப்பதாக நினைத்து கரூருக்கு முதல்வர் செல்லக்கூடாது என திமுக சொல்கிறது.

* ஒழுங்கா படி ஒழுங்கா படி என உச்சநீதிமன்றம் சம்மட்டியால் அடித்தும் திமுக விழித்துக்கொள்ளவில்லை.

* தீய சக்தியை திருத்தவும் முடியாது. எனவே அவர்களை இடைத்தேர்தலில் வெளுத்து விடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com