சமூக நீதி விடுதிகளில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆய்வு- இன்று அதிரடி உத்தரவுகள்

மாணவர்கள் கூறிய அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பு.
TN CM Vijay
Published on

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் நேற்று ஆய்வு கொண்ட நிலையில் சமூக நீதித்துறை இன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

முதலமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்களில் ஒருவர், விடுதியில் நிலவும் குறைகள் குறித்து புகார் தெரிவித்தார்.

குவிந்த புகார்கள்

* விடுதி உணவுகள் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

* தமிழ்நாடு அரசு பல வசதிகளுடன் விடுதி ஏற்பாடு செய்து கொடுத்தும், அதிகப்படியான குறைகள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.

* இது சம்பந்தமாக கடந்த ஆண்டு அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பாக, இங்கு உள்ள மாணவர்கள் எல்லோரும் முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

* விடுதியில் புழுக்கள் உள்ள அசைவ உணவுகளை சமைப்பது தொடர்பாக புகார் கூறப்பட்டதையடுத்து, அப்போது ஐந்து நாட்கள் தரமான உணவுகள் வழங்கப்பட்டது. ஆனால் அதையடுத்து மீண்டும் தரமற்ற நிலையிலேயே உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

* இங்கு வசிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்துகொண்டும், டிஎன்பிஎஸ்சி போன்ற அரசாங்க உத்தியோகங்களுக்கு படித்து கொண்டும் இரவு நேரத்தில் 10 மணியளவில் விடுதிக்கு வருகின்றனர். அப்போது விடுதியின் கதவுகள் மூடப்படுகிறது, இதன் காரணமாக மாணவர்கள் வெளியில் படுத்து தூங்கும் அவலநிலை ஏற்படுகிறது.

முதலமைச்சர் விஜய் உத்தரவு

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் நேற்று ஆய்வு கொண்ட நிலையில் சமூக நீதித்துறை இன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

முதலமைச்சரிடம் நேற்று மாணவர்கள் கூறிய அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உணவுப்பட்டியலை உடனடியாக மாற்றி, சிலிண்டர் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்ட இட்லி, சப்பாத்தியை மீண்டும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எம்.சி ராஜா விடுதியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த கைப்பந்து மைதானத்தை மாணவர் பயன்பாட்டுக்கு திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கியிருந்து வெளியே பகுதிநேர பணிக்கு செல்லும் மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com