5-ம் கட்ட பிரசாரத்தை திருவள்ளூரில் இருந்து தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், ஐந்தாம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 13-ஆம் தேதி திருவள்ளூரில் தொடங்குகிறார்.
5-ம் கட்ட பிரசாரத்தை திருவள்ளூரில் இருந்து தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 5-ம் கட்ட பிரசாரத்தை திருவள்ளூரில் தொடங்குகிறார். இதுதொடர்பாக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

இந்த தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், ஐந்தாம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 13-ஆம் தேதி திருவள்ளூரில் தொடங்குகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்:

13.04.2026 (திங்கட்கிழமை)

மாலை 5 மணிக்கு திருவள்ளூர்- மருத்துவக் கல்லூரி சாலை (பொதுக்கூட்டம்), திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூவிருந்தவல்லி, ஆவடி

மாலை 7 மணிக்கு ராணிப்பேட்டை - அம்மூர் ரோடு (பொதுக்கூட்டம்), ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு

14.04.2026 (செவ்வாய்க்கிழமை)

மாலை 5 மணிக்கு வேலூர் (பொதுக்கூட்டம்), வேலூர், காட்பாடி, அணைகட்டு, கீழ்வைத்தியநாதன்குப்பம், குடியாத்தம்

மாலை 7 மணிக்கு திருப்பத்தூர்- மண்டலவாடி மைதானம் (பொதுக்கூட்டம்), திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை

15.04.2026 (புதன்கிழமை)

மாலை 5 மணிக்கு காரிமங்கலம் - பெரியாம்பட்டி (பொதுக்கூட்டம்), பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்

மாலை 7 மணிக்கு சேலம்- தேசிய நெடுஞ்சாலை, சீலநாயக்கன்பட்டி (பொதுக்கூட்டம்), சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி சங்ககிரி, வீரபாண்டி

16.04.2026 (வியாழக்கிழமை)

மாலை 5 மணிக்கு நாமக்கல் -பொம்முகுட்டைமேடு (பொதுக்கூட்டம்), நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com