

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
மக்கள் எழுச்சியை பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்.
யார் என்ன செய்தாலும் திமுக கூட்டணி வெற்றியை தடுக்க முடியாது.
தமிழ்நாட்டுக்கு எத்தனை பாஜக தலைவர்கள் படையெடுத்தால் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்.
சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது.
தோல்வின் உச்சத்திற்கே சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரக்தியில் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.