கொளுத்தும் கோடை வெயிலால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரசார நேரத்தில் மாற்றம்

மாலை 5 மணி, இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிப்பு.
கொளுத்தும் கோடை வெயிலால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரசார நேரத்தில் மாற்றம்
Published on

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை புதுச்சேரியில் இன்று தொடங்குகிறார். ஏற்கனவே வெளியிடப்பட்ட அவருடைய பிரசார பயண திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

இன்று மாலை 5 மணி- புதுச்சேரி, நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி- சீர்காழி, இரவு 7 மணி கடலூர், 8-ந்தேதி மாலை 4 மணி- திருவண்ணாமலை, இரவு 7 மணி- விழுப்புரம், 9-ந்தேதி மாலை 5 மணி- கரிசங்கால்- படப்பை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் வாயிலாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதுவரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை மற்றும் மாலை என பிரசாரம் மேற்கொண்டு வந்தார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அவருடைய பிரசார பயண திட்டம் மாலை, இரவு என்று மாற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com