TN Assembly Election | முதலமைச்சர் 6-ம் கட்ட பிரசாரத்தை 17-ந்தேதி ஆண்டிபட்டியில் தொடங்குகிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
TN Assembly Election | முதலமைச்சர் 6-ம் கட்ட பிரசாரத்தை 17-ந்தேதி ஆண்டிபட்டியில் தொடங்குகிறார்
Published on

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தலைவர்கள் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்துவருகிறார். ஏற்கனவே 4 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ள அவர் 5-ம் கட்ட பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக 6-ம் கட்ட பிரசாரத்தை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆண்டிபட்டியில் தொடங்குகிறார். அன்று மாலை 5 மணிக்கு ஆண்டிபட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

அன்று இரவு 7 மணிக்கு அவர் திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பூர் தெற்கு, வடக்கு, பல்லடம், அவினாசி, தாராபுரம், காங்கேயம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு ஓசூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், வேப்பனஹள்ளி, தளி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com