

இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் ஒரு முக்கியமான ஜனநாயக நடைமுறையாகும்.
ஆனால், தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் அனைத்துக் கட்சி கூட்டமும் நடைபெற்றது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை
தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமர், மத்திய அரசை கண்டித்து வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து இன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் எம்பிக்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்னும் சற்றும் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறார்.