விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுடன் விரைவில் இணைவார்கள் - புஸ்ஸி ஆனந்த்

118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுடன் விரைவில் இணைவார்கள் - புஸ்ஸி ஆனந்த்
Published on

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம்பிடித்து உள்ளது.

இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய், ஆளுநர் அர்லேகரை சந்தித்து த.வெ.க.வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.

ஆனால் ஆளுநர் அர்லேகர், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதினார். மேலும் த.வெ.க. நிர்வாகிகளை நேரில் அனுப்பியும் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று 5 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி மட்டும் த.வெ.க.வுக்கு கைகொடுத்தது. மற்ற கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்களிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது:

* கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் விஜய் புகைப்படத்தை பார்த்துவிட்டு நம்பிக்கையுடன் இருங்கள்.

* எதையும் நினைத்து குழம்ப வேண்டாம். நேர்மையான நடந்து கொள்ளுங்கள், நல்லதே நடக்கும்.

* விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுடன் விரைவில் இணைவார்கள், உறுதியாக இருங்கள் என்று அவர் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com