எடப்பாடி பழனிசாமியை சந்தித்த புஸ்சி ஆனந்த்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த புஸ்சி ஆனந்த்
Published on

தமிழ்நாடு அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாகவே பரப்பாக காணப்படுகிறது. இதற்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகம் எந்த கட்சிகளின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை நிரூபிப்பார் என்பதே காரணம் ஆகும்.

பெரும்பான்மை ஆதரவை பெற தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கு கடிதம் மூலம் ஆதரவு கோரியுள்ளதாக தகவல் வெளியாகின. இதில் த.வெ.க.வை ஆதரிக்கும் முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பின் போது, ஆட்சி அமைப்பதற்கு அ.தி.மு.க.வின் ஆதரவை புஸ்சி ஆனந்த் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com