

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது, பா.ஜ.க., பா.ம.க. (அன்புமணி), த.மா.கா.. அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இரு கட்சிகளும் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக இன்று காலை 10 மணிக்கு டெல்லி புறப்படுகிறார். அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்வதற்காக அவர் டெல்லி செல்கிறார்.
இரு கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று இரவு சென்னைக்கு வர உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.