அரக்கோணம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

அரக்கோணம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த வேலூர் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் கேசவன் (வயது 30). இவருக்கு தலையில் வழுக்கை விழுந்துள்ளது. இதனால் பெங்களூரு சென்று செயற்கை முறையில் முடி வைத்தும் திருமணத்திற்கு பெண் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com