இன்று நினைவு நாள்- வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு வைகோ மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மணிமண்டத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Published on

கயத்தாறு:

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம்மன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மணிமண்டத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பாக இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., மதுரை தெற்கு புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., அரியலூர் சின்னப்பா எம்.எல்.ஏ., சாத்தூர் ரகுராமன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர். எஸ். ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ரைமண்ட், தென்காசி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் உட்பட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அரசு சார்பில் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. சங்கரநாராயணன், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அதிகாரிகள் உள்பட பலர் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com