திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா பிறப்பித்துள்ளார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

கோவை மேற்கு மண்டல காவல் துறையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படிகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சென்னகேசவன் திருப்பூர் மாநகருக்கும், ஈரோடு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆனந்த் திருப்பூர் மாநகருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுபோல் திருப்பூர் மாநகரம் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜன்பாபு கோவை சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். , 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த முருகையன் கோவை சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தனசேகரன் திருப்பூர் மாநகருக்கும், திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நாகராஜன் கோவை சரகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அவினாசி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக இருந்த மாலதி கோவை மாநகருக்கும், அவினாசி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தனபாலன் கோவை மாநகருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா பிறப்பித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com