அரசு பஸ் கண்டக்டரிடம் டிக்கெட் பையை திருடி சென்றவர் கைது

துறையூர் அருகே அரசு பஸ் கண்டக்டரிடம் டிக்கெட் பையை திருடி சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

துறையூர்:

துறையூரை அடுத்த உள்ள தம்மம்பட்டி ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தம்மம்பட்டி கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை துறையூரில் இருந்து ஆத்தூர் செல்ல பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். 

அப்போது, பயணிகளுக்கு வழங்க வைத்திருந்த பஸ் டிக்கெட் வைத்திருந்த பையை மர்மநபர் ஒருவர் திருடிக்கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் டிக்கெட் பையை திருடிச்சென்றது சேலம் நல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ்(45) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 962 மதிப்பிலான டிக்கெட்டை பறிமுதல் செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com