துறவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் - மாநிலங்களவையில் சிவசேனா எம்.பி. கோரிக்கை

துறவிகளுக்கும், மதத்தலைவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என மாநிலங்களவையில் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரியங்கா சதுர்வேதி
பிரியங்கா சதுர்வேதி
Published on

புதுடெல்லி:

சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியபோது, “நமது நாட்டில் பல துறவிகள் மற்றும் மதத்தலைவர்களிடம் ஆதார் அட்டை இல்லை. அவர்களிடம் ஸ்மார்ட் போனும் கிடையாது. அவர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்றுகொண்டே இருப்பவர்கள் ஆவார்கள். எனவே அவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “ஆஸ்துமாவினால் அவதிப்படுவோருக்கு கொரோனா பாதிப்பு ஆபத்து கூடுதலாக இருப்பதால், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com