யாசகம் பெற்று இதுவரை ரூ.4½ லட்சத்தை நிவாரண நிதிக்கு அனுப்பிய முதியவர்

முதியவரின் சேவையை பாராட்டி மதுரை மாவட்ட கலெக்டர் சிறந்த சமூக சேவகருக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளார்.
முதியவர் பூல்பாண்டி
முதியவர் பூல்பாண்டி
Published on

திசையன்விளை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நாதன் கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 80). இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். குடும்பத்தினர் கைவிட்ட நிலையில் வேறு வழியின்றி பிழைப்பிற்காக யாசகம் எடுத்து வருகிறார். யாசகம் பெருவதில் கிடைக்கும் வருவாயில் தனது தேவைக்கு போக மீதி பணத்தை பல்வேறு ஊர்களில் உள்ள பள்ளிகூடங்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி உள்ளார்.

இவரது சேவையை பாராட்டி மதுரை மாவட்ட கலெக்டர் சிறந்த சமூக சேவகருக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளார். தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாததால் யாசகம் மூலம் பெற்ற பணம் ரூ.10 ஆயிரத்தை திசையன்விளையில் உள்ள ஒரு வங்கி மூலம் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இதுவரை ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வழங்கி உள்ளதாக பூல் பாண்டி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com