

புதுடெல்லி:
வெளிநாடுகளில் உளவு பார்க்கும் இந்திய உளவு அமைப்பான ‘ரா’-வின் தலைவர் சமந்த்குமார் கோயல், ஜூன் 30-ந் தேதி ஓய்வு பெறுகிறாா். அதன்பிறகு ஓராண்டு காலம் அவர் ‘ரா’ அமைப்பின் செயலாளராக பணியாற்ற பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சமந்த்குமார் கோயல், 1984-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த பஞ்சாப் மாநில மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.
அதுபோல், உளவுப்பிரிவு தலைவர் அரவிந்த் குமார், ஜூன் 30-ந் தேதி ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரிசபையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.