சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை

சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சேலம்:

தருமபுரி மாவட்டம் பணிக்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் பவித்ரா (வயது21).

இவர் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பவித்ரா வழக்கம் போல் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு வந்தார். மதியம் சாப்பிடுவதற்காக அறைக்கு சென்றார். ஆனால், அவர் நீண்டநேரமாகியும் வெளியே வராததால் உடன் பணியாற்றும் நர்சுகள் அந்த அறைக்கு சென்று பார்த்தனர். அவரது அறை பூட்டி கிடந்தது. இதனையடுத்து அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது பவித்ரா பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து வந்து பார்த்தபோது பவித்ரா வி‌ஷ ஊசி போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து பவித்ராவின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்த தகவல் குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில் பவித்ராவுக்கு வேலைக்கு செல்வது பிடிக்கவில்லை என்று அவர் பெற்றோரிடம் கூறியதாக தெரியவந்தது. இதன் காரணமாக அவர் வி‌ஷ ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com