நாகர்கோவில் அருகே நர்சு தூக்குப்போட்டு தற்கொலை

நாகர்கோவில் அருகே நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ஜாண்சன். இவருடைய மகள் ஜூடிட் லாவன்யா (வயது 23), நர்சு. இவர் கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில ஜூடிட் லாவன்யாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ஊருக்கு வந்தார். 

பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com