களக்காட்டில் கள் விற்றவர் கைது

களக்காட்டில் கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

களக்காடு:

களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சிதம்பரபுரம் பெருமித்தான்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிதம்பரபுரம் தெற்கு ரதவீதியை சேர்ந்த பாஸ்கர் (வயது 42) தனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓடினார். அவரை பிடித்து அவர் வைத்திருந்த மண் பானையை சோதனையிட்ட போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட கள் இருந்தது தெரியவந்தது. அவர் தனக்கு சொந்தமான பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com