ஜோ பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன் - ஈரான் புதிய அதிபர்

ஈரான் அதிபா் தேர்தலில் போட்டியிட்ட அப்துல் நாசா் ஹெம்மாட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்க விரும்புவதாக பிரசாரத்தின்போது தெரிவித்தார்.
இப்ராகிம் ரைசி
இப்ராகிம் ரைசி
Published on

டெஹ்ரான்:

ஈரான் அதிபா் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி, டெஹ்ரானில் செய்தியாளா்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா என கேட்டபோது, இல்லை. ஜோ பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன் என்றார்.

மேலும், ஈரானுக்கு எதிரான அனைத்து அடக்குமுறை தடைகளையும் நீக்க அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com