இண்டேன் கியாஸ் சிலிண்டர் பெற மிஸ்டு கால் வசதி அறிமுகம்

இண்டேன் கியாஸ் சிலிண்டர்கள் புக்கிங் செய்யவும், புதிய இணைப்புகளைப் பெறவும் மிஸ்டு கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கியாஸ் சிலிண்டர்
கியாஸ் சிலிண்டர்
Published on

சென்னை:

இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இண்டேன் கியாஸ் சிலிண்டர்கள் புக்கிங் செய்யவும், புதிய இணைப்புகளைப் பெறவும் மிஸ்டு கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் கியாஸ் சிலிண்டர்கள் புக்கிங் செய்யப்படும்.

இதனை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். அப்போது அவர்,   ‘கியாஸ் சிலிண்டர்   பயன்பாடு என்பது கடந்த 2014-ம் ஆண்டு 55.9 சதவீதமாக இருந்தது - தற்போது 99 சதவீதம் என்ற அளவை எட்டி உள்ளது எனலாம். தாமதமின்றி   கியாஸ் சிலிண்டர்   கிடைக்க வேண்டும் என்பதற்காக மிஸ்டு கால் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, இயக்குனர் (மார்க்கெட்டிங்) குர்மீத்சிங், தமிழ்நாடு- புதுச்சேரி செயல் இயக்குனர் மற்றும் மாநில தலைவர் ஜெயதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com