தமிழகத்திற்கு ரெட் அலர்ட், கோலி சாதனை, சூரரைப் போற்று படத்தை பாராட்டிய சமந்தா உள்ளிட்ட முக்கிய செய்திகள்

புரெவி புயல் காரணமாக தமிழகத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், விராட் கோலி புதிய சாதனை, சூரரைப் போற்று படத்தை பாராட்டிய சமந்தா உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.
விராட் கோலி
விராட் கோலி
Published on

# இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து வழங்குவது குறித்து அரசு ஒருபோதும் பேசவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். 

# இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 95 லட்சத்தை நெருங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 89.32 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 4.28 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

# கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தைச் சேர்ந்த நிரூப் என்பவரின் திருமணம் பெங்களூருவில் ஆடம்பரமாக நடைபெற்றது. மணமகன் நிரூப், மணமகளை கரம்பிடிக்க, தும்கூருவில் இருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 

# வங்கக் கடலில் புரெவி புயல் மையம் கொண்டுள்ள நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

# வங்கக்கடலில் பாம்பனுக்கு அருகில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதால் பாம்பனில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

# எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படுவதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

# கொரோனா மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தனது கணவரால் சிறிய அளவிலான வேலையை கூட செய்ய முடியவில்லை என அவரது மனைவி குற்றச்சாட்டியுள்ளார்.

# இந்திய பெண் நீரா தாண்டனை அமெரிக்க நிதிநிலைக்குழு தலைவராக நியமிக்க குடியரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

# நிரவ் மோடியை பிரிட்டனில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

# ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் கோலி அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை எட்டினார். இதன்மூலம் சச்சின் சாதனையை அவர் முறியடித்தார்.

# ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பெற்றார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் அவர் அறிமுகமாகியிருக்கிறார்.

# சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சூரரைப்போற்று திரைப்படம் இந்த வருடத்தின் சிறந்த படம் என்று பிரபல நடிகை சமந்தா கூறியிருக்கிறார். மேலும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் கூறி இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com