கோவையில் மளிகை கடைக்காரர் தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனமுடைந்த மளிகை கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on: 

சரவணம்பட்டி:

கோவை கோவில்பாளையம் காபிகடை பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 28). இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டு ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனால், கடந்த சில நாட்களாக தீனதயாளன் யாருடனும் பேசாமல் மனவருத்தத்தில் இருந்தார். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த தீனதயாளன் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீனதயாளன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com