கிருஷ்ண ஜெயந்தி- கவர்னர் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி திருவிழா தமிழகத்தில் அமைதி, ஒற்றுமை, செழிப்பு, சுகாதாரத்தை கொண்டு வரட்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கவர்னர் பன்வாரிலால் புரோகித்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்
Published on

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிஇருப்பதாவது:-

தமிழக மக்களுக்கு எனது இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகாவிஷ்ணுவின் 8-வது அவதாரமான கிருஷ்ணரின் பிறப்பு ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

தீய சக்திகளை ஒழிப்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த விழா அமைந்துள்ளது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் உத்வேகம் தரும் கிருஷ்ணரின் பகவத் கீதை மூலம் நாம் நமது கடமைகளை நேர்மையாக செய்ய வேண்டும். இந்த புனித நாளில் கிருஷ்ணரின் கோட்பாடுகளை கையாண்டு சமுதாயம் மேம்பட பாடுபட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com