வள்ளியூர் அருகே வெள்ளத்தில் மூழ்கி 5 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு

வள்ளியூர் அருகே வெள்ளத்தில் மூழ்கி சுமார் 5 ஆயிரம் கோழிகள் இறந்தது. இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.
தண்ணீரில் மூழ்கி பலியான கோழிகளை காணலாம்
தண்ணீரில் மூழ்கி பலியான கோழிகளை காணலாம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை இடிமின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

வள்ளியூர் அருகே உள்ள ஆணைகுளத்தில் வில்சன் என்பவருக்கு சொந்தமான ஒரு கோழிப்பண்ணை உள்ளது.

இங்கு சுமார் 7 ஆயிரம் கோழிகளை வளர்த்து வருகிறார். வள்ளியூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மழைநீர் பல்வேறு இடங்களில் சூழ்ந்தது. இதனால் கோழிப்பண்ணை காம்பவுண்டு சுவர் திடீரென உடைந்தது.

பின்னர் மழைநீர் பண்ணைக்குள் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீரில் அங்குள்ள சுமார் 5 ஆயிரம் கோழிகள் மூழ்கி இறந்தது. இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கோழிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com