விவசாயிகள் போராட்டம் - பஞ்சாப்பில் 30 ரெயில்கள் ரத்து

பஞ்சாப்பில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் எதிரொலியாக 30 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சண்டிகர்:

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் ஆளும் பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் ரெயில் மறியல், வேளாண் நிலங்களை தீ வைத்து எரித்தல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், ரெயில் மறியல் போராட்டம் எதிரொலியாக பஞ்சாப்பில் ரெயில் போக்குவரத்து முடங்கி மக்கள் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளனர்.  எனினும், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், பஞ்சாப்பில் போராட்டத்தினை முன்னிட்டு வடக்கு ரெயில்வே 30 ரெயில்களை ரத்து செய்துள்ளது.  இதேபோன்று 11 ரெயில்கள், குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் நிற்பதற்கு பதிலாக, அதற்கு முன் வரும் ரெயில் நிலையத்துடன் சேவையை நிறுத்தி கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரெயில் பயணிகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு விசயங்களை கவனத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com