போலீஸ் விசாரணை முடிந்தது- முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நீதிமன்ற காவல்

பெங்களூரில் நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
Published on

சென்னை:

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி தன்னுடன் குடும்பம் நடத்தியதாகவும், 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்து அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்றும் சாந்தினி தனது புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து மணிகண்டன் தலைமறைவானார். அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மணிகண்டன் இன்று கைது செய்யப்பட்டார். பெங்களூரில் நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த அவரை, தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

சுமார் இரண்டரை மணி நேரம் மணிகண்டனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த பதில்களை பதிவு செய்தனர். விசாரணை நிறைவடைந்ததும், சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு மணிகண்டன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com