ஏரியூர் அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

ஏரியூர் அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள செல்லமுடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல் குவாரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சத்யா அதே பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். சத்யாவிற்கும் அவரது பக்கத்து நிலத்துக்காரரான இளங்கோவன் என்பவருக்கும் இடையே அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இளங்கோவன் குடும்பத்திற்கும், சத்யாவிற்கும் இடையே மீண்டும் தகராறு நடந்தது. இதில் இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர் தாக்கியதில் சத்யா படுகாயம் அடைந்து பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில், ஏரியூர் போலீசார் பெண்ணை தாக்கியதாக நல்லம்மாள், இளங்கோவன், தங்கராஜ், கோவிந்தம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com