ஏரியூர் அருகே லாரி திருடியவர் கைது

ஏரியூர் அருகே லாரி திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள செல்லமுடி பகுதியை சேர்ந்தவர் சிவன் (வயது 45). லாரி உரிமையாளர். சம்பவத்தன்று அவர் தனது டிப்பர் லாரியை தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்தார். இந்த லாரி திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்த சிவன் ஏரியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். காரிமங்கலம் அருகே உள்ள பொன்னேரி பகுதியில் போலீசார் டிப்பர் லாரியை மடக்கி பிடித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஏரியூர் அருகே உள்ள மூலலைன் பகுதியை சேர்ந்த செல்வம் (43) என்பதும், லாரியை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்வத்தை கைது செய்தனர். மேலும் லாரியையும் மீட்டு சிவனிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com